அடுத்த இரு நாட்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

0
287


தமிழகத்தில் அடுத்த இரு நாட்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக மழைக்கு அதிகமான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வரும் 27ஆம் தேதி தமிழகத்தில் சுமார் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

குறிப்பாக 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் தமிழகத்தின் தென் மாவட்டங்களான நெல்லை ,தென்காசி ஆகிய இரு மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் கூறியுள்ளது.
அதுபோல சென்னையில் இன்னும் இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாய் காணப்படுவதுடன் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்