அதிர்ச்சியளித்த தனுஷ்…

0
384

[19/01/2022] இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகனான நடிகர் ‘தனுஷ்’ 2002 ஆம் ஆண்டு வெளியான ‘துள்ளுவதோ இளமை’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.முதல் படத்திலேயே நல்ல நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமானார். அப்போதிலிருந்து நடிகர் ‘ரஜினிகாந்தின்’ மகள் ‘ஐஸ்வர்யா’ வுடன் நட்புடன் பழகி வந்தார். சிறிது நாட்களில் நட்பு காதலாக மாற இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். அவர்களின் காதல் விவகாரம் குடும்பத்தினருக்கு தெரிய வர இருவரும் 2004 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

அப்போது நடிகர் தனுசுக்கு வயது 22. ஐஸ்வர்யாவை விட இரண்டு வயது இளையவர் என்றாலும் இருவரும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். பிறகு நடிகர் தனுஷ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்தார். பாலிவுட், ஹாலிவுட் என அவரது சினிமா தரத்தை மேலும் உயர்த்திக் கொண்டார். இப்போது உலகெங்கும் ரசிகர்களைக் கொண்ட ஒரு நடிகராக தனுஷ் உயர்ந்துள்ளார். அவர் திரைத்துறையில் நடிகராக மட்டுமல்லாமல் பாடகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவராகவும் விளங்குகிறார்.அவருடைய சினிமா சாதனைகளுக்கு மனைவி ஐஸ்வர்யா பெரும்பங்கு ஆற்றியிருக்கிறார்.

தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக செய்தி ஒன்றைப் பதி விட்டார்.இந்த செய்தி அவருடைய ரசிகர்கள் மற்றும் சக திரைப்பட நடிகர்களுக்கும் அதிர்ச்சியாக அமைந்தது.

தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டதாவது:

“18 ஆண்டுகள் நல்ல நண்பராகவும்,மனைவியாகவும், தனது மகன்களுக்கு நல்ல தாயாகவும் விளங்கிய எனது மனைவியை அவர் சம்மதத்துடன் முழு மனதுடன் விவாகரத்து செய்கிறேன்.. எங்களது இந்த முடிவிற்கு மதிப்பளிக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
அவரது இந்த டுவிட் அவரது ரசிகர்களையும் திரைத்துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது..

நடிகர் தனுஷ் போயஸ் கார்டனில் பிரம்மாண்ட வீடு ஒன்றைக் கட்டி வருகிறார்.. கடன் சுமையில் இருந்து வந்த அவருக்கு அவரின் மாமனாரான நடிகர் ரஜினிகாந்த் எந்த உதவியும் செய்யவில்லை, அதுதான் அவர்களது விவாகரத்திற்கு காரணம் என்றும் சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப் படுகிறது.. எனினும் இந்த விவாகரத்திற்கு முழுமையான காரணம் என்ன என்பது இன்னும் தெரியாத நிலை உள்ளது..

தமிழ்,
நெல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்