அமித்ஷா, தமிழக எம்பிக்கள் சந்திப்பு :

0
300

(சனவரி,18) தலைநகர் டெல்லியில் நேற்று தமிழக எம்பிக்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து மனு அளித்தனர்.

திமுக எம்பி டி .ஆர்.பாலு தலைமையிலான தமிழக எம்பிக்கள் கொண்ட குழு,தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பது தொடர்பான மனுவை மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் வழங்கினர்..

கடந்த செப்டம்பர் .13 ல் திமுக அரசால் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநரிடம் அளிக்கப்பட்டது. ஆளுநர் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாத இந்த சூழ்நிலையில் ,இது தொடர்பாக திமுக தலைமையிலான தமிழக எம்பிக்கள் கொண்ட குழு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து மனு அளிக்க பலமுறை முயற்ச்சித்தும் அவை யாவும் தோல்வியில் முடிந்தன.

இந்நிலையில் நேற்று சனவரி.16,தமிழக எம்பிக்களை சந்திக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒப்புதல் அளித்தார். அதன்படி திமுக எம்பி டி.ஆர்.பாலு தலைமையிலான தமிழக எம்பிக்கள் தலைநகர் டெல்லியில் நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து, தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு அளிப்பது தொடர்பான மனுவை அளித்தனர்.

இந்த சந்திப்பில் திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு,மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அதிமுக எம்பி ஜெயக்குமார், பாமக தலைவர் ஜி.கே.மணி, டி. இராமச்சந்திரன் (சிபிஐ) , பி.ஆர்.நடராஜன் (சிபிஎம்) , விசிக எம்பி இரவிக்குமார் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்