அமைச்சர் ரோஜாவின் செல்போன் திருட்டு: 3 மணி நேரத்தில் மீட்பு

0
94

திருமலை: திருப்பதியில் இளைஞர் நல மேம்பாடு மற்றும் விளையாட்டுத்துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஆந்திர மாநில அமைச்சர் நடிகை ரோஜா தலைமை தாங்கி கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இந்த கூட்டத்தில் பங்கேற்றபோது அவரது செல்போன் திடீரென மாயமானது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார், அமைச்சரின் செல்போன் எண் ஆதாரமாக வைத்து அமைச்சர் சென்ற இடமெல்லாம் சல்லடை போட்டு தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அதில் பத்மாவதி விருந்தினர் மாளிகையில் ஒரு வாலிபர், செல்போனை திருடியது சிசிடிவி கேமராவில் தெரியவந்தது. பின்னர், போலீசார் செல்போன் சிக்னல் வைத்து ரூயா மருத்துவமனை அருகே இருந்த செல்போன் திருடனை போலீசார் கைது செய்து அவனிடமிருந்த செல்போனை மீட்டு, அமைச்சர் ரோஜாவிடம் ஒப்படைத்தனர். 3 மணி நேரத்திற்குள் செல்போன் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்