அவள் வருவாளா ?மாற்றம் வருமா ? இலவு காத்த கிளிதானா ?

0
291

அவள் வருவாளா என்ற தலைப்பை பார்த்துவிட்டு யாரும் பயந்துவிடாதீர்கள், இதன் பின்னணியை பார்ப்போம், ஒரு ஊரில் ஒரு கணவன் மனைவி இருந்தார்கள். அவர்களுக்கு குழந்தை இல்லை ,கணவன் நன்றாக குடித்துவிட்டு வீட்டுக்கு வருவான் ? மனைவி கணவன் என்னசெய்தாலும் பொறுமை காப்பாள் .கணவன் என்ன வேண்டுமானாலும் செய்வான் ,ஆனால் நாம் தான் அதை பொருத்து வாழவேண்டும் என்று அவரது தாயார், அவளை சொல்லி சொல்லி வளர்த்து வந்ததால், அவள் கணவனே உலகம் என்று வாழ்ந்து வந்தாள்.இதனை நன்கு பயன்படுத்திய அவளது கணவனும் வேலைக்கு செல்லாமல் ,மனைவி வேலைக்கு சென்று சம்பாதித்து வரும் பணத்தையும் குடித்துவிட்டு வந்து சாப்பாடு கேட்பான், ஒருமுறை குடிக்கச் சென்ற இடத்தில் பணம் இல்லாமல்,மது கடைக்காரர் மண்டியிட்டு உட்கார வைத்துவிடுகிறார். அவனது மனைவிக்கு தகவலும் சொல்லி அனுப்புகிறார் ,`பணத்தை கொடுத்துவிட்டு கணவனை மீட்டு செல்|` இதைக் கேட்ட அவளது கணவன் மனைவி வருவாளா ? என்னை விட்டுச் செல்வதற்கு அவள் வருவாளா ? என்ற வாசலை நோக்கி காத்து வருகிறான் ?அவன் மனைவி யார் காலிலோ விழுந்து ,பணத்தை வாங்கி கணவனை மீட்டு செல்கிறாள் .அவன் திருந்துவானா? இல்லை என் மனைவி என்னை மீட்க வருவாள் என்று தவறு செய்துவிட்டு மீண்டும் அவன் அவள் வருவாளா? என்ற நோக்கில் காத்து நிற்பானா?  காலத்தின் கையில் ?……….

மற்றொரு இடத்தில், ஒரு பெண் தனது கணவனை இழந்து ;மகனை வளர்த்து ஆளாக்க மிகுந்த சிரமப்படுகிறார்கள் , வீட்டு வேலைகள் செய்து மகனை படிக்க வைக்கின்றாள், பள்ளியில் நோட்டுப்புத்தம் வாங்காத காரணத்தினால் வீட்டிற்கு திருப்பியனுப்பி விடுகின்றார்கள்,அந்தப்பையனும் தனது தாயிடம் தனக்கு நோட்டுப்புத்தகம் வாங்கித்தர கேட்கின்றான்,அப்படி வாங்கித்தரவில்லையெனில் பள்ளிக்கு செல்லமுடியாதென்கிறான், தாயோ நீ பள்ளிசெல் நான் நோட்டு வாங்கி தருகிறேன் என்கிறாள் .பள்ளியும் செல்கிறான் அவன் மனம் பள்ளியில்  நாடவில்லை அவள் வருவாளா ? நோட்டை வாங்கிக்கொண்டு அவள் வருவாளா ?என்று வாசலை உற்று நோக்கி, வழிமீது விழிவைத்து காத்துக்கொண்டிருக்கின்றான் ?தூரத்தில் அவனது தாய் தெரிகின்றாள்; தன் தாயின் வருகைக்காக காத்திருந்த கண்களில் ,தாயின் கைகளில் நோட்டை பார்த்தவுடன் மனம் பூரிப்படைகிறான். இவையெல்லாம் கடந்த காலங்களில் நடந்த உண்மைச் சம்பவங்கள்…..

மற்றும் ஒரு உண்மை சம்பவம் ,ஒரு ஊரில் அழகான மனைவி ,பொறுப்பில்லாத கணவன், வேலைக்கு போய் சம்பாதிக்கும் பணத்தை விலைமாதரிடமும், போதையிலும் செலவழிப்பான் ,மனைவியை அடித்து துன்புறுத்துவான்,அவன் மனைவியும் அடிகளையும், வாய் கூசாது பேச்சுக்களையும் ,வாங்கிக் கொண்டு மௌனமாக கண்ணீர் விடுவாள். அவள் பிறந்த வீட்டின் உதவியால் ,வாழ்ந்துகொண்டு தன் அவளநிலையை  யாரிடமும் சொல்லாமல் வாழ்ந்து வந்தாள் .இப்படியிருக்கையில் ஒருநாள் அவனது கூட்டாளிகள் பணத்தைப் பறித்துக்கொண்டு, விலைமாதர் வீட்டில் விட்டு விடுகிறார்கள்; விலைமாது எனக்கு பணம் தருகிறாயா ?அல்லது உன் மனைவியை என் காலில் விழுந்து கூட்டிக்கொண்டு போக சொல்கிறாயா? என்ற வினவுகிறாள் மேலும் அவன் மனைவிக்கு தகவல் அனுப்புகிறார் ?விலைமாதுவிடம் சிக்கிய கணவன் மனைவி தன்னை மீட்க வருவாளா ?அவள் வருவாளா? அவள் வருவாளா என்று காத்துக் கொண்டிருக்கிறார் . இந்நிலையில் அவரது மனைவி, தன் தாலியை அடமானம் வைத்து கணவனை மீட்டு செல்கிறாள் .இந்த உண்மைச் சம்பவம் நம்மை பதற வைக்கின்றது அந்த பெண்ணின் மனம் என்ன பாடுபடும் ? இனியாவது அவன் சிறந்து வாழ முடிவு செய்வானா?  தெரியவில்லை காலம்தான் பதில் சொல்லப்போகின்றது.

விழிப்புணர்ச்சிக்காக உங்கள்

ஆசிரியர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்