ஆன்மீகம் என்றால் என்னவாம் ? ஆன்மீகம் என்றால் இறை நம்பிக்கை என்பார்கள் ; ஆனால் ஆன்மீகம் என்பது இறைவனையும் நம்மையும் இணைக்கும் ஒரு பாலம் எனலாம் .ஒரு சராசரி மனிதனுக்கு கஷ்டங்களும் ,சோதனைகளும் வரும் பொழுது அவன் மனம் சோர்ந்து புத்தி பேதலிக்கும், கெடுதல் செய்யத்தூண்டும் , அடுத்தவர்களை துன்புறுத்தும், இதற்கெல்லாம் மேல் போதைக்கு அடிமையாக்கி தன் குடும்பத்தையும் சீரழித்து சுற்றியிருப்பவர்களையும் தொந்தரவு செய்து நாளடைவில் அவர்களது வாழ்க்கையும் வீணாகிவிடும். அதே சமயம் ஒருவன் ஆன்மீகவழியை தேர்ந்தெடுத்து, அதன் வழி பின்பற்றினால் இறைவனிடம் தனது பணிகளை ஒப்படைத்து விட்டு, இறைவன் என்னைப் பார்த்துக் கொள்வான்; வழிநடத்துவான் என்று நம் மனதை வலிமையாகவும் ! உறுதியாகவும் மென்மையாகவும் வைத்துக் கொள்வான். ஆன்மீகம் வழியில் தெளிவானச்சிந்தனையுடன் இருப்பவனை ஒரு கெட்டச்சக்தியும் நெருங்காது, தவறானவழியில் செல்பவர்கள் அவனை நெருங்கமாட்டார்கள். அப்போது அவனது குடும்பமும், சுற்றி இருப்பவர்களும் அவனுடன் நட்புடன் இருந்து நன்மை அடைவார்கள்.ஆன்மீகம் சார் எண்ணங்கள் இருக்கும் பொழுது, நல்லச்சிந்தனையும்- நல்லநட்பும் நம் மனதில் நிறைந்திருக்கும் .எனவே நமக்கு ஆன்மீகம் வழிதான் இறை பாதுகாப்புடன் கூடியது: மேலும் சிலர் நான் எப்பொழுதும் இறைவனை நினைக்கின்றேன், எனக்கு ஒரு வழியும் பிறக்கவில்லை ,என்று புலம்புவார்கள் அது தவறு ஆன்மீகம் என்பது நமக்கு பாதுகாப்பு அரண் -நம் மனதையும் உடலையும் பாதுகாக்கும் கேடயம் அதற்கு நாம் நினைக்காமல் இருந்தால் எப்படி ?நாம் தினமும் எழுந்தவுடன் இறைவனை நினைத்து நேர்மையுடன் நமது வாழ்க்கை பயணத்தை வழி நடத்தினால் ,இறைவன் நம்மை காத்து எந்தவொரு தீயச்சிந்தனையும் நம்மை அண்டாது நமக்கு உறுதுணையாய் இருப்பார் இதுவே ஆன்மீகத்தின் பலன்கள் எனவே அனைவரும் நமக்கு நல்லது கெட்டது ஏற்படும்போது பாரத்தை இறைவனிடம் ஒப்படைத்து நம் மனதையும் உடலையும் நேர்மை ஒழுக்கம் தூய்மை என்ற நல்லொழுக்கங்களுடன் நாளை முதல் நல்லச்சிந்தனையுடன் இறைவனை துதிப்போம் நாம் ஆன்மீகம் வழியில் நடப்போம்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்