தூத்துக்குடி ஆழ்வார்திருநகரி இந்துமேல்நிலைபள்ளியில் குடியரசுதினவிழா கோலாகலம்

0
277

நாட்டின் 73 வது குடியரசுதினவிழா இன்று வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி இந்து மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 73 வது குடியரசு தினவிழாவின் நிகழ்வில், தேசத்திற்கு ஆயிரக்கணக்கான மருத்துவர்களை உருவாக்கிய கல்வியாளர் முனைவர் அ.குணசேகர் அவர்கள் கொடியேற்றி வைத்து மாணவர்களுக்கு இந்தியகுடியரசுதின விழா பற்றிய விளக்கஉரை நிகழ்த்தினார்.


சிறப்பு விருந்தினராக வருகைபுரிந்த கல்வியாளர் முனைவர் அ. குணசேகர் அவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் திரு. ராமசாமி அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்தினார். அதனையடுத்து நன்றியுரை வழங்கிய உதவி தலைமை ஆசிரியர் திரு.ராஜா அவர்கள், பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள் ,பள்ளி நிர்வாக குழுவினர்கள், மாணவ மாணவியர்கள்,
தொழிலதிபர் அ.க. ஸ்டாலின் , தொழிலதிபர் பா. அசோக்குமார், பாஜக மாவட்ட செயலாளர்கள் சு.மாரி துரைசாமி மற்றும் N. பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவின் முடிவில் மாணாக்கர்களுக்கு இனிப்புகள் வழங்க பட்டது.

பெ. சூர்யா , நெல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்