ஆஸ்கர் வெல்லுமா ஜெய்பீம்?…

0
255

(22-01_2022)

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இயக்குனர். “ஞானவேல்” இயக்கத்தில் நேரடியாக ஓடிடி தளத்தில் நடிகர் “சூர்யா” நடிப்பில் வெளியான “ஜெய்பீம்” திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது. “இருளர்” சமூகத்தவர் ,அவர்கள் வாழ்வில் சந்திக்கின்ற கொடுமைகளை இப்படம் தோலுறித்துக் காட்டியது.

இருளர் சமூகத்தைச் சேர்ந்த இராசாகண்ணு – பார்வதி தம்பதியர்களுக்கு நேர்ந்த சமூக சித்திரவதைகளுக்கு நியாயமான முறையில் நீதிமன்றத்தில் போராடி தீர்ப்பைப் பெற்றுக் கொடுத்த அன்றைய வழக்குறைஞர் “சந்துரு”வைப் பற்றிய கதைதான் இந்த ஜெய்பீம் திரைப்படம்.

இத்திரைப்படம் வெளியாகி இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்ப்படுத்தியது.. படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளும் இடம்பெற்று விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டன . இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு திரைத்துறையின் மிக உயரிய விருதான “ஆஸ்கர்” விருது வழங்கும் விழா அறிவிக்கப்பட்டுள்ளது.. இப்போட்டிக்கு உலகம் முழுவதிலும் இருந்து திரைப்படங்கள் பங்கேற்க உள்ளன. இந்நிலையில் இந்தியா சார்பில் 2 திரைப்படங்கள் ஆஸ்கர் போட்டிக்குத் தேர்வாகியுள்ளன.

அவை : சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் மற்றும் மோகன்லால் நடிப்பில் வெளியான மரைக்காயர் திரைப்படமும் தான்.இந்த இரு படங்களும் ஆஸ்கர் விருதை வெல்லுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்..
தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்