இன்னுயிர் காப்போம் திட்டம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்

0
250

சாலைகளில் விபத்தில் சிக்கி காயம் அடைவோர் முதல் நாற்பத்தி எட்டு மணி நேர சிகிச்சை செலவினை அரசே ஏற்கும் என்ற இன்னுயிர் காப்போம் என்ற திட்டத்தை துவங்கி வைத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதாவது சாலை விபத்துகளில் காயம் அடைவோர் மற்றும் உயிருக்கு ஆபத்தான நிலையில் பாதிக்கப்பட்டோரின் முதல் நாற்பத்தி எட்டு மணி நேர அவசர சிகிச்சையை தமிழக அரசு சார்பாக ஏற்று அவர்களின் உயிருக்கான பாதுகாப்பை வழங்குவதற்காக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளதாக தமிழக முதலமைச்சர் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் மாவட்ட அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளிள், மொத்தம் 610 மருத்துவமனைகளில் இன்னுயிர் காப்போம் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

விபத்தில் சிக்கியவர்களின் முதல் நாற்பத்தி எட்டு மணி நேரம் தான் தங்கமான நேரம் என்பதால் அந்த செலவினை அரசு ஏற்றுக் கொள்ள முடிவு செய்திருப்பதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

பெ. சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்