இன்றும் நாளையும் டீசல் விற்பனை இல்லை

0
159

இன்றும் நாளையும் டீசல் விற்பனை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது மக்கள் வரிசையில் நிற்க வேண்டாம் என்று பெட்ரோலிய அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்க மக்கள் நீண்ட தூரம் வரிசையாக நின்று காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு கொண்டிருந்த வேளையில் கையிறுப்பு குறைந்து வருவதால் இரண்டு நாட்கள் டீசல் விற்பனை இல்லை என்று இலங்கையின் பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கையிருப்பு குறைந்து வருவதால் இன்றும் நாளையும் டீசல் வைக்க வேண்டாம் என்றும் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என்றும் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 37 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் டீசலை தரையிறங்க முடியாத நிலை இருக்கின்றது. பெட்ரோல் விற்பனை தொடரும் எனவும் தடை இல்லாமல் தொடர்ச்சியாக பெட்ரோல் கிடைக்கும் எனவும் பெட்ரோலிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

டீசல் பற்றாக்குறை காரணமாக இலங்கையில் நீண்ட நேரம் மின் விநியோகம் தடை செய்யப்படுவதால் இணையம் சேவை வழங்குவதிலும் தொடர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. டீசல் பற்றாக்குறை காரணமாக தொலைபேசி கோபுர ஜெனரேட்டர்களுக்கு டீசல் வழங்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்