இபிஎஸ் ஐ யாராலும் அசைக்க முடியாது – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

0
24

அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியை யாராலும் அசைக்க முடியாது என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி கட்சிகள் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சிலர் அதிமுகவை அழிக்க நினைப்பதாகவும் அவர்களின் கனவு நிறைவேறாது எனவும் அவர் தெரிவித்தார்.அதிமுக ஆட்சியில் அம்மா உணவகம் குறித்த செங்கோட்டையில் விளக்கிக் கொண்டிருந்த போது மதுபோதையில் குறுக்கிட்டு பேசிய நபர் ஒருவரை செங்கோட்டையன் கிண்டல் செய்தது நகைச்சுவையை ஏற்படுத்தியது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்