நாத்திகம் பேசலாமா ? இயற்கையா ? இறைவனா ?

0
343

வெண்கூந்தல்
தலையுடைய
வானத்தின்….கூந்தலை – நீராட்ட மலர் தூவும் சோலைபோல்தான் மழைத்துளிகளோ ?
நீராடியக்கூந்தலின்
நீரோட்டவுலர்த்தும் ஒளிகளாய்தான் கோப கதிர்களுடன் சூரியனோ ?அங்கே
உலர்ந்தக்கூந்தலுக்கு
நறுமணம் ஊட்டும் சாம்பிராணி புகைகளாய்
தான் கருமேகங்களோ ?
அவள்
கூந்தலை -அள்ளி முடியும் சடையின்
முடிச்சுகளாய்தான்
மின்னல்களோ ?
முடிந்தக்கூந்தலுக்கு- அழகு சேர்க்க ஒளிரும்
மலர்களாய் தான் நட்சத்திரங்களோ ?
இவ்வழகிய
கூந்தல் உடையோர்
முகம் பார்க்கவே -நிலவோ ?அவ்வழகை கண்ட ஆண்மகனான
தென்றல் காற்று
உரசிப்போக
அவள் சிரித்த சிரிப்பே
இடிகளோ ?
சூடிய மலர்களை
சுற்றும்
வண்டுகளாகவே
கோள்களோ ?
அவள்
அழகைக் கண்டு
பொறாமை கொண்ட தோழியின் முகமே இருட்டோ ?இவர்கள்
துள்ளி விளையாடும் விளையாட்டு மைதானமாகவே வளிமண்டலமோ ?
அவள்
பல்லாங்குழி ஆடும் பலகைகளாய் தான் பள்ளத்தாக்குகளோ ?
அவள்
சூடிய -மலரிலிருந்து
விழுந்த
வாடிய மலர்களிலிருந்து பிரிந்த வித்துகளிலிருந்து தளிர்த்ததுவே
மரங்களும் செடிகொடிகளுமோ
அவள்
அருந்துவதற்காக
பிடித்து வைத்திருக்கும் குளிர்பானங்கள்தான் கடல்களும் நதிகளுமோ ?
அவளை
விரட்டும் -வில்லனாகவே புயல்காற்றோ ?
சில
சிறாய்ப்புடன்
காப்பாற்றும்
ஹீரோவாகவே பூமியோ ? இவர்களை
சேர்த்து வைக்கும்
சமாதான புறாக்களாகத்தான் மக்களோ ?
அவரைச்
சுற்றியிருக்கும்
பிற கிரகங்களே
அவளின் உறவினர்களோ ?இவர்கள்
கூடி விளையாடும்
குடிசையாகதான்
காடுகளோ ?
இவர்கள்
கரையினில் குவித்து விளையாடிய
மணல்களே
மலைகளோ ?
இத்தனையும்
கடந்து
இவர்கள்
இருவரும் -ஈன்றெடுத்த குழந்தைதான்
இறைவனோ ?

ஆக இயற்கையை மிஞ்சியவர் எவருமில்லையல்லவா? இறைவன் கூட இயற்கையின் குழந்தையெனில் அதற்கும்மேலான சக்தியொன்று இருக்கின்றதல்லவோ? ஓ ! இதுதான் நாத்திகாமோ? ……..

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்