இலங்கையைக் கண்டிக்க வேண்டும் – பிரதமருக்கு முதல்வர் கடிதம்…

0
233


(25-01-2022) இலங்கை அரசால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் 150 மீன்பிடிப் படகுகளையும் ஏலம் விடப் போவதாக அண்மையில் இலங்கை அரசு அறிவித்ததாக செய்திகள் வெளியாகின. இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

அதில், தமிழக மீனவர்களின் மீன்பிடிப் படகுகளை ஏலம் விடப் போவதாக அறிவித்த இலங்கை, தனது முடிவை மாற்றிக் கொள்ளவும், படகுகள் அனைத்தையும் தமிழக மீனவர்களிடம் இலங்கை அரசு ஒப்படைக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

மேலும் இலங்கை அரசின் இம்முடிவானது தமிழக மீனவர்களை பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருப்பதாகவும் மீன்பிடி தொழில் தொடர்பாக இந்தியா இலங்கைப் பேச்சுவார்த்தை நடைபெறவிருக்கும் இச்சூழலில் இலங்கையின் இந்த அறிவிப்பு தமக்கு வேதனை அளிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கை அரசால் கைப்பற்றப்பட்ட படகுகளை ஏற்கனவே அந்நாட்டு நீதிமன்றம் விடுவித்து விட்டதாகவும் ஆனால் இன்னும் படகுகளை ஒப்படைக்காத இலங்கை அரசைக் கண்டிக்க வேண்டியும் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இலங்கைக்கு தனது கண்டனத்தைப் பதிவு செய்த மு.க.ஸ்டாலின் 2018 குப் பிறகு இலங்கை எந்த சட்ட விதிகளையும் பின்பற்றாமல் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்குக் கோரிக்கை விடுத்துள்ளார் .

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்