
இலங்கையில் பொருளாதார வீழ்ச்சி காரணமாக வரி உயர்வு செய்யப்பட்டதால் கருவாடு ஏற்றுமதி தூத்துக்குடியில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கிலோவிற்கு 102 ரூபாய்க்கு இருந்த கருவாடு இறக்குமதி வரி இலங்கையில் 302 ரூபாய்க்கு உயர்ந்ததால் தூத்துக்குடியில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கூடிய கருவிகளை இலங்கையில் இறக்குமதி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

தூத்துக்குடியில் சுற்றிலும் 50 நிறுவனங்கள் கருவாடு ஏற்றுமதியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு நிறுவனங்களிலும் 40 முதல் 50 நபர்கள் வரை வேலை பார்த்து வருகின்றனர். ஏற்பட்ட வரிவிதிப்பு உயர்வால் தூத்துக்குடியில் 10 ஏற்றுமதிநிறுவனங்கள் மட்டுமே தற்போது செயல்பட்டு வருகின்றன. இதனால் இங்கு கருவாடு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களும் அதில் பணியாளர்களாக வேலை செய்யும் கூலி ஆட்களும் வெகுவாக தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது இதற்கு அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.