இலங்கை கடற்படை அட்டூழியம்…

0
272


[20-01-2022] இராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று இரவு சுமார் 500 விசைப் படகுகள் மூலம் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.. அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவரின் விசைப்படகில் நேருக்கு நேர் மோதினர்..

உடனே சுதாரித்துக் கொண்ட மீனவர்கள் 7 பேரும் படகில் இருந்து கடலில் குதித்தனர்.
இலங்கை கடற்படைக் கப்பல் மோதியதில் மீனவரின் விசைப்படகு முற்றிலும் சேதமடைந்தது கடலுக்குள் மூழ்கியது.
மற்ற படகில் இருந்த மீனவர்கள் கடலில் குதித்த மீனவர்களை பத்திரமாக காப்பாற்றி இராமேஸ்வரம் திரும்பினர்.

சேதமடைந்து கடலில் மூழ்கிய விசைப்படகின் மொத்த மதிப்பு சுமார் 45 லட்சம் ரூபாய் எனக் கூறப்படுகிறது.
இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறிய செயலால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான தமிழக மீனவர்கள் “இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தங்களுக்கு முறையான இழப்புத்தொகை வழங்க வேண்டும்” எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்