இளைய தலைமுறையினரே மாற்றத்தை நோக்கியும் நல் சமுதாயத்தை நோக்கியும் செல்லுங்களேன்!

0
462

சமூக அக்கறை

`ஞாயிற்றை கைமறைப்பார் இல் `

அனைத்திற்கும் அடிப்படை கல்வி; அந்த அடிப்படை தாரகமந்திரம் நம்மை எவ்வாறு வழிநடத்துகின்றதோ?அவ்வழியே நாமும் நம் உளமும் – ஆககல்வி,வேலைவாய்ப்பு, சமூக நலனாகிய அனைத்தும் ஒன்றோடு ஒன்று பிணைந்து உள்ளது….அதாவது கல்வி இருந்தால் தான் …வேலை வாய்ப்புக் கிடைக்கும்…வேலை வாய்ப்புக் கிடைத்தால் தான் சமூக நலனில் தனிப்பட்ட அக்கறை இருக்கும்…இருந்தாலும் …என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு நபருக்கும் சமூக நலனில் எவ்வளவு அக்கறை இருக்கப்போகின்றது ?அரிதிலும் அரிதாக அத்திபூத்தாற்போல்;அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வைரங்கள்,தம் கடமையென தம்மை அர்ப்பணித்து மிக அதிகமாக போதித்தால் மட்டுமே நம் நாடு முன்னேறும்..இந்த சமூக அக்கறை ஒவ்வொரு மனிதருக்கும் கட்டாயம் இருக்க வேண்டும்! ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் நாடு முன்னேறும் போது நாமும் நம் சந்ததியினரும் சேர்ந்து முன்னேற்றம் அடைவோம் என்ற எண்ணம் வரவேண்டும்,சமூக நலனில்
அக்கறை உள்ளவர்களாகிய நாம் செய்ய வேண்டியது…முதலில் சமூக நலனில், அக்கறையுள்ள நல்லவர்களை நாம் கண்டறிய வேண்டும் ? நாம் வசிக்கும் தெருவை முதலில் சுத்தமாக வைத்து கொள்ளவேண்டும்…அனாதைகள்,ஆதரவற்றவர்கள்,முதியோர்கள்,கண்…காது குறைபாடு உள்ளவர்கள்,மாற்றுத் திறனாளிகள்,விதவைகள்,
குழந்தை இல்லாதவர்கள் ,மனவளர்ச்சிக் குன்றியவர்கள்,இப்படி நம்மைச் சுற்றியுள்ள நமது உறவுகளை நாம் சந்தித்து அவரவர்களுக்கு வேண்டிய காரியங்களைசெய்து கொடுத்து -அவர்களை மகிழ்ச்சி அடையச் செய்து, நாமும் மகிழ்ச்சியடைய வேண்டும்…இப்போது வார்டு தேர்தல் வருகின்றது என்று வைத்துக் கொள்வோம், எந்த விஷயத்தையும் பணம்இருப்பவர்கள் தான் செய்ய முடியும் என்ற எண்ணம் தான் தோன்றும் ? அந்த நிலையினை மாற்றவேண்டும் ? உதவும் மனப்பான்மை கொண்டவர்கள் யாராகயிருந்தாலும் பணம் தடையாகயில்லாத நிலையில்; ஒரு களத்தில் இறங்கி பணியாற்றலாம்…ஆனால் நம் நாட்டின் நிலை பணம் இருந்தால் தான் ,எதையும் சாதிக்க முடியும் என்ற வகையிலேயே உள்ளது ,பெண்களுக்கு சமஉரிமை கிடைக்கும் பட்சத்தில்; நாட்டிற்கு நல்லதொரு வழிகாட்டுதல் கிடைக்க வார்டுக்கு ஒன்றோ,மூன்றோ அல்லது ஐந்து பேரோ பொறுப்பு என்ற நிலையை உருவாக்கி ,வார்டில் நடக்கும் பிரச்சனைகளுக்கு நாமே தீர்வு காணவேண்டும்…முடிந்தளவு காவல் நிலையம் செல்லாமல் ,மக்கள் பிரச்சனைகளை சுற்றத்தாரே சுமூகமாக தீர்க்கவேண்டும் ,எந்தவொரு பிரச்சனைக்கும் காவல் நிலையம் தீர்வாகாது ? மறப்போம்,மன்னிப்போம் என்று நினைத்துப்பாருங்கள்; இழப்புகளுமில்லை,கசப்புகளுமில்லை மக்களின் பொதுப் பிரச்சனை ஆகிய குடி தண்ணீர் மின்சாரம்,சாலை,சாக்கடை, இவைகளுக்கு உடனடி தீர்வுக் காணவேண்டும்…பள்ளிக்கூடங்கள் ,கோயில் நிலம் ,மருத்துவமனை, திரையரங்கம், உணவகம் , இப்படிபட்ட பொது மக்கள் பயனடையும் இடங்களிலும் ,பொது மக்கள் சார்பாக சீர்திருத்தம் செய்யவேண்டும் ? முக்கியமாக பொதுக் காரியங்களை செய்பவர்கள் ,ஈகை குணத்துடனும்,துணிவுடனும் நேர்மையுடனும் செயலாற்ற வேண்டும்…முடிவாகச் சொல்கிறேன் சமூகத்தில் …சமூக நலனில் அக்கறை உள்ளவர்களை …கண்டறிந்து களம் இறக்கினால் ,நாம் காணலாம் புதியதோர் உலகை சமூகநலம் நமது குடும்பநலம்; சமூக நலம் பேணி பாதுகாக்க வேண்டும்,நமது குடும்பம் என்றால் என்ன ? நாம் நம் அம்மா,அப்பா ,தாத்தா ,பாட்டி, அத்தை ,மாமா அவர்களது பிள்ளைகள் சித்தி,சித்தப்பா இவர்களது குழந்தைகள்,இவர்களை நாம் எவ்வாறு பேணி காப்பதுதான் குடும்பநலன் என்பதைவிட மிகவும் முக்கியமானது ? ஏனென்றால் ஒரு சமூகம் என்பது நம் மனம் அருகில் இருப்பவர்கள்,அதாவது நம் எதிர்வீடு ,பக்கத்து வீடு ,பக்கத்துத் தெரு, அடுத்ததெரு என்று நாம் அன்றாடம் சந்திக்கும் அனைவருமே நமது சமூகம்; நம்மை சுற்றி இருப்பவர்கள் நலமாக நடந்தால்தான் நாமும் நலமுடன் இருக்க முடியும் !நாம் நமது வீட்டையும், சுற்றுப்புறத்தையும் ,தூய்மையாக வைத்திருந்தால்தான் நாமும் நலமாக நம்மை சுற்றி இருப்பவர்களும் நலமாக இருப்பார்கள், இதுவே சமூக நலம் தான் ,சில வீட்டில் இருந்து குப்பைகளை அள்ளி வெளியே வீசி விடுவார்கள் ,அந்த குப்பை காற்றில் சுற்றிச்சீற்றி வந்து நம் வீட்டிற்குள் வரும், சுற்றி இருப்பவர்களுக்கும் மாசுபடுத்தும் ,கண்ணில் விழுந்தால் கண்ணில் இருந்து கண்ணீர் வரும், இதை இருவரும் சற்று சிந்தித்து ? நாம் குப்பையை ஓரிடத்தில் சேர்த்து விட்டால் ;அதுவே சிறந்த சமூக நல்லதாக கருதப்படும். சில தெருவில் நடந்து செல்லும்போது, வயதானவர்கள் விதவைகள், மாற்றுத்திறனாளிகள், எதிரில் வந்தால் அவர்களை கடுஞ்சொற்களால் திட்டியும்,காரித்துப்பவும் செய்வார்கள், இதற்கெல்லாம் மேலாக சிலபேர் நான் புறப்பட்டு வரும்போது ஏன் என் எதிரில் வந்தான் ? என்று அடிப்பது ,நாய் போன்ற வாயில்லா ஜீவன்களை கல்லால் அடிப்பது, தெருவில் செல்லும்போது வழியில் சிறுநீர் கழிப்பது, என்று சமூக கெடுதலை செய்வார்கள்,அவ்வாறு கெடுதல் செய்யாமல் ;அனைவருக்கும் நல்லதே நினைத்து, நல்லது செய்வதுதான், சிறந்த குணமாகும். பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும்போது பேருந்து வந்தவுடன், நம்மைவிட வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் இருக்கையில் அமர்வதற்கு உதவியை செய்வதும் சிறந்த மாற்றமாகும். சிறந்தச்சமூகமாக, நாம் மாற வேண்டுமெனில் ,சிலர் நடந்து செல்லும்போது ,வழியில் யாராவது விபத்தில் சிக்கினால் ? அவர்களுக்காக நாம் பணம் உதவி செய்யாவிட்டாலும், காவல்துறைக்கு தெரியப்படுத்தினால் , அதுவே நாம் செய்யும் சிறந்த சமூகநலம். சிலர் சமயத்தை,சந்தர்ப்பத்தை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, அவர்களது சொந்தவெறுப்புகளை தீர்த்துக்கொள்ள இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி அவர்கள் பகையை உருவாக்கி அதை பார்த்து ஆனந்தம் அடைவார்கள்; அவ்வாறு இல்லாமல், நமக்கு வேண்டாதவர்களையும் ,நட்பு பாராட்டி அவர்களுக்கு நல்லது செய்தால் ,அதுவே சிறந்த சமூக நலம் !

தமிழ் வாழ்க!

தமிழ் மொழி வாழ்க!

நன்றி.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்