உக்ரைன் -இல் போர் பகுதியில் சிக்கித்தவிக்கும் 100 மருத்துவ மாணவிகள்

0
236

உக்ரைன் நாட்டின் விமான தளங்கள், வான் பாதுகாப்பு கட்டமைப்புகளை அழித்துவிட்டதாக ரஷ்ய தகவல் தெரிவித்து இருக்கிறது.

உக்ரைன் நாடு நாங்கள் ஐந்து ரஷ்ய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தி இருக்கிறோம், என்று அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. உக்ரைன் நாட்டின் பொது மக்கள் அங்கு இருக்கக்கூடிய மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையில் தஞ்சம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சீனா மற்றும் உலக நாடுகளின் கோரிக்கையை புறந்தள்ளி ரஷ்யா போர் விமானங்கள் மூலமாகவும் , போர்க்கப்பல்கள் மூலமாகவும் தொடர்ச்சியாக ஏவுகணைத் தாக்குதல் நடத்தி கீவி பகுதிகளில் குண்டு மழை பொழிந்து வருகிறது. காலையில் ஆரம்பகட்ட தாக்குதலில் துறைமுகங்கள் மற்றும் விமான ஓடுதளங்கள், ஆயுத தளவாடங்களை குறிவைத்து தாக்கப்பட்டு அழிக்கப்பட்டுக் கொண்டிருந்த சூழலில் தற்பொழுது மக்கள் வசிக்கக்கூடிய குடியிருப்பு பகுதிகளில் அடுக்குமாடி கட்டிடங்கள் மீது தொடர்ச்சியாக ரஷ்ய போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து வருகிறது. தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட கிவி பகுதியில் இந்தியாவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ மாணவிகள் சிக்கித் தவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் கொடூரத் தாக்குதலுக்கு நடவடிக்கைக்கு உரிய பதிலடி தரப்படும் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பெ. சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்