உக்ரைன் பயணத்தை தவிருங்கள் : அமெரிக்க மக்களுக்கு அந்நாட்டு தூதரகம் எச்சரிக்கை!!

0
242

உக்ரைனில் அதிகரித்துள்ள போர் பதற்றங்களுக்கு மத்தியில்அந்நாட்டிற்கு யாரும் பயணிக்க வேண்டாம் என தங்கள் நாட்டு பயணிகளுக்கு அமெரிக்கா தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது உக்ரைன் எல்லையில் பெரும் படைகளை குவித்து வைத்திருக்கும் ரஷ்யா எந்த நேரத்திலும் போர் தொடுக்க கூடும் என ஆபத்து நிலவுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் அமெரிக்கா, பொருளாதார தடை போன்ற எச்சரிக்கைகளை விடுத்து வருகிறது. இருந்த போதிலும் ரஷ்யா தனது படைகளை விலக்கிக் கொள்ளாமல் உள்ளது.

இந்த நிலையில், உக்ரைனில் அதிகரித்து வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் அந்நாட்டுக்கு பயணிகள் யாரும் செல்ல வேண்டாம் என அமெரிக்கா தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைனில் அமைதியின்மை சூழல் நிலவுவதாகவும், சில பகுதிகளில் ஆபத்து அதிகரித்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனால் உக்ரைனை மையமாக வைத்து அமேரிக்க ரஷ்யா மோதும் வாய்ப்புகள் அதிகம் என உலக நாடுகள் எதிர்பார்த்து வருகிறது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்