உயிர் போகும் சூழலில் கூட ‘வா வா சுரேஷ்’ ன் மனிதநேயம்

0
288

கேரளாவின் பிரபலமான பாம்பு பிடிக்கும் வல்லுனரான வாவா சுரேஷை சில தினங்களுக்கு முன்பாக பாம்பு தீண்டியது. மக்கள் வசிக்கும் பகுதியில் நுழைந்த ராஜநாகம் பாம்பினை பிடிக்க முயன்ற பொழுது அது அவரது காலில் கடித்து தீவிர சிகிச்சைப்பிரிவில் கடந்த திங்களன்று அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல்நலம் தேறி நல்ல நிலையில் மீண்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் அவர் பாம்பை பிடிக்கும் பொழுது அவரை கடித்த அந்த பாம்பு மீண்டும் மக்களை கடித்து விடக்கூடாது என்பதற்காக அவர் கடிபட்ட பின்பாக கூட அவரது காலை இறுக்கி அழுத்தி இரத்தத்தினை வெளியேற்றி, ஒரு கையினால் காலை பிடித்துக்கொண்டு ஓடிச்சென்று தன்னைக் கடித்த பாம்பு வேறு யாரையும் கடித்து விடக்கூடாது என்பதற்காக அவற்றைப் பிடித்து ஒரு கையில் வைத்துக் கொண்டு மறு கையால் தன் காலில் கடிவாயில் உள்ள இரத்தத்தை வெளியேற்றி மீண்டும் ஓடிச்சென்று பாம்பை பிடித்தார்.

உயிர்போகும் சூழலில் கூட அவர் தன் உயிரைப் பற்றி கவலைப்படாமல் மற்ற மக்களை யாரையும் தீண்டி விடக் கூடாது என்பதற்காக அவற்றை பிடித்த பின்பே தான் காலில் அடிபட்ட இடத்தில் ஒரு கயிறை வைத்து கட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக புறப்பட்டார். இந்த நிகழ்வு நடந்ததை பொதுமக்கள் ஒருவர் பதிவு செய்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த காணோளியை கண்ட மக்கள் அவரின் பெருந்தன்மையை பெரிதாக பாராட்டி வருகின்றனர்.

பெ. சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்