உலக நிரிழிவுநோய் தின சிறப்பு நிகழ்ச்சிகள்

0
299

உலக நீரிழிவு நோய் தின
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
அரவிந்த் கண் மருத்துவமனை
தலைமை மருத்துவர் ராமகிருஷ்ணன் தகவல்
திருநெல்வேலி.
நவ.16 உலக நீரிழிவு நோய் தினத்தையொட்டி நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளதாக அதன் தலைமை மருத்துவர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.


இது குறித்து அவர் கூறுகையில், ஐக்கிய நாடுகள் சபை கடந்த 2006ம் ஆண்டு உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16 ந்தேதி உலக நீரிழிவுநோய் தினம் கடைப்பிடிக்கவேண்டுமென்று அறிவித்தது.கனடாவிலுள்ள டொரன்டோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த பிரெடரிக் பாண்டிங் என்பவர் 100 ஆண்டுகளுக்கு முன்பு நீரிழிவு நோய் சிகிச்சைக்கான இன்சுலினை கண்டு பிடித்தார்.

அவரது பிறந்த நாளன்று உலக நீரிழிவு நோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது.2001ல் ஒரு
நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு நீரிழிவு நோய் விழிப்புணர்வு கடைப்பிடிக்கப்பட்டது.2021ம் ஆண்டு அனைவருக்கும் நீரிழிவு நோய் சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில்
விழிப்புணர்வு நடைபெற்றது.

2021 முதல் 2023 வரை தீராத நோயான
நீரிழிவு நோயால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நாடு முழுவதும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உலக சுகாதார நிறுவனம் அறிவித்தியுள்ளது.உலகில் நீரிழிவு
நோயாளிகளின் தலைநகராக இந்தியா உருவாகியுள்ளது. உலகமக்கள் தொகையில் ஆறு சர்க்கரை நோயாளிகளில் ஒருவர் இந்தியாவில் இருப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

உலக சர்க்கரை நோயாளிகள் 17 சதவீதம் பேர் இந்தியாவில் உள்ளனர்.உலக
அளவில் 46 கோடியே 50 லட்சம் நீரிழிவு நோயாளிகளில் இந்தியாவில் மட்டும் 7 கோடியே 70 லட்சம் பேர் உள்ளனர்.உலகில் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.கடந்த 1986ம் ஆண்டு உலக மக்கள் தொகையில்
4.5 சதவீத மக்கள் நீரிழிவு நோயாளிகளாக இருந்த நிலையில் 2021ம் ஆண்டு 8.6 சதவீத நோயாளிகளாக அதிகரித்துள்ளனர்.

இந்தியாவில் நீரிழிவு நோயின் தாக்கம் நகர்ப்புறங்களில் 10.5 சதவீதம் முதல் 16 சதவீதம் வரையிலும், கிராமப்புறங்களில் 3.1 சதவீதம் முதல் 5 சதவீதம் வரையிலும் உள்ளது.நீரிழிவு நோய் நிரந்தர நோயாகவும், நோய் தாக்கத்தின்
அறிகுறிகள் பாதிப்பிற்குள்ளான
நோயாளிகளுக்கு தெரியாத வகையில் இந்த நோய் பரவி வருகிறது.அவ்வப்போதைய சர்க்கரை பரிசோதனையும்,நோய்
கட்டுப்பாட்டு முறையும், உரிய சிகிச்சையும் நோயாளிகள் மேற்கொள்ள வேண்டும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு ரெட்டினோபதி
எனப்படும் கண் விழித்திரை பாதிப்புகள், சிறுநீரக பாதிப்பு,இருதய பாதிப்பு போன்றவை எளிதில்
ஏற்படும்.எனவே நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு பேரணி, கண்காட்சி, கருத்தரங்கம்,நோய் கண்டறிதல் முகாம் நடைபெறுமென்றார்.கண் மருத்துவர்கள் மீனாட்சி,செய்யது முகைதீன் உட்பட பலர் இதில் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்