ஐஸ் கிரீம் சுவைத்து, லவ் பேர்ட்ஸ்- ஐ திருடிய ருசிகர திருடன்

0
282

திருட வந்த இடத்தில் ஐஸ் கிரீம் சாப்பிட்டு கொண்டு நோட்டமிட்ட இளைஞர், பொருள் எதுவும் கிடைக்காததால் லவ் பேர்ட்ஸ் கிளியை கூண்டோடு திருடிச்சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.

சென்னை அடுத்த ஆவடி காமராஜர் நகர் முத்துமாரியம்மன் கோவில் பகுதியில் வசிக்கும் சபீர் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது வீட்டில் திருட்டு முயற்சி நடைபெற்றது தொடர்பான வீடியோவை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதில் வீட்டின் மதில் சுவர்மீது ஏறிக் குதித்த இளைஞர் ஒருவர் அங்கு பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவை மறைக்க முயற்சி செய்துள்ளார்.

ஆனால், சிசிடிவி கேமரா பழைய நிலைக்கு வந்ததை அறியாத திருடன், குளிர்சாதன பெட்டியில் இருந்த ஐஸ்கிரீமை சாப்பிட்டுக் கொண்டே அங்கிருந்த பொருட்களை நோட்டமிடுகிறான். இதையடுத்து அந்த வீட்டில் பொருட்கள் எதுவும் கிடைக்காததால் வீட்டில் இருந்த லவ் பேர்ட்ஸ் கிளிகளை கூண்டோடு திருடிச் சென்றுள்ளான்.

இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்த சபீர், வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, மற்றவர்கள் ஜாக்கிரதையாக இருக்குமாறு தெரிவித்துள்ளார். இந்த விடியோவை, பார்த பலரும் நடிகர் வடிவேலுவின் காமெடியை சுட்டிக்காட்டி பதிவிட்டு வருகின்றனர். பிடிபடுவானா லவ் பேர்ட்ஸ் திருடன் என்ற ஏக்கத்தில் உரிமையாளர் தவித்து வருகிறார். இதே போன்று சில மாதங்களுக்கு முன்பாக எனது நாய் திருடு போனது கண்டுபிடித்து தருபவர்களுக்கு தற்க சன்மானம் வழங்கபடும் என்று போஸ்டர் அடித்து ஒரு இளைஞர் ஒட்டியதும் இது போன்ற திருட்டில் அடங்கும்.

பெ.சூர்யா , நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்