கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் மீன்பிடிஉபகரணங்கள் கொள்ளை 8 மீனவர்கள் படுகாயம்

0
258

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கையை சார்ந்த கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி ஜிபிஎஸ் கருவிகள் உள்ளிட்ட பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட மூன்று மீனவர்களும் சிகிச்சைக்காக நாகை மாவட்டம் வேதாரண்ய அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் மீண்டும் ஒரே நாளில் இரண்டாவது முறையாக மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மீது மீண்டும் கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி அதில் 8 மீனவர்கள் படுகாயமடைந்து தங்கள் மீன்பிடி உபகரணங்களை இழந்துள்ளனர். இவர்கள் மீது அரிவாள், இரும்பு பைப், ரப்பர் தடி போன்ற ஆயுதங்களை கொண்டு தாக்கி கடற்கொள்ளையர்கள் மீன்பிடி வலைகள் மற்றும் பிற உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

தமிழக மீனவர்கள் மீது தொடர்ச்சியாக இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியும் துப்பாக்கி சூடு நடத்தியும் மீன்பிடி உபகரணங்கள் மற்றும் படகுகள் போன்றவற்றை பறிமுதல் செய்து தொடர்ச்சியாக இடையூறு விளைவித்து வந்த வேளையில் கடற்கொள்ளையர்களின் அட்டூழியம் மீண்டும் மீனவர்களை பெரிய கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழக மீனவர்களின் நலனுக்காக இனி இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெறாமல் இருக்க தமிழகஅரசு நடவடிக்கை எடுக்குமா என்று மீனவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பெ.சூரிய பிரகாஷ் , நெல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்