காவலர்கள் அதிரடி சஸ்பெண்ட்..

0
239

சென்னை வியாசர்பாடி புது நகரைச் சேர்ந்தவர் அப்துல் ரகீம்..சட்டக் கல்லூரி மாணவரான இவர் தரமணி சட்டக் கல்லூரியில் 5ஆம் ஆண்டு படித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு நல்லிரவு 12 மணிக்கு அவர் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது போலிஸார் தடுத்து நிறுத்தி ‘மாஸ்க் எங்கே” எனக் கூறி ரூபாய் 500 அபராதம் விதித்தனர்.

அப்போது ரகீமுக்கும் போலிஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் அப்துல் ரகீம் உத்திர குமார் என்ற காவலரைக் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த போலிஸார், “பணியைச் செய்யவிடாமல் தடுத்ததாகவும் காவலரைத் தாக்கியதாகவும்” கூறி அவரைக் கைது செய்து அப்துல் ரகீம் மீது வழக்குப்பதிவு செய்து கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்..

அங்கு ‘இரவு முழுவதும் அப்துல் ரகீமை காவலர்கள் நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்கியதாகவும்” அதில் அவருக்கு முகத்தில் தையல் போடும் அளவிற்குக் காயம் ஏற்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் அப்துல் ரகீம் தாக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலானது. இது போன்ற தொடர் குற்றச்சாட்டுகளால் “கொடுங்கையூர் தலைமைக் காவலர் பூமிநாதன்,முதல்நிலைக் காவலர் உத்திர குமார்” ஆகிய இருவரும் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டனர்.

தற்போது இருவரையும் பணியிடை நீக்கம் செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்