குடிநீருக்காக 60,000 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு ..

0
300

(01-02-2022)நாடு முழுவதும் அனைத்து வீடுகளிலும் தூய்மையான தரமான குடிநீரை மக்களுக்கு வழங்குவதற்காக சுமார் 60,000 கோடி ரூபாயை ஒதுக்கியிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் பல்வேறு திட்டப் பணிகளை செயல்படுத்த தொடர்புடைய துறைகளுக்கு நிதிஒதுக்கீடு செய்யப்பட்டதை பட்டியலிட்டார்.

அதன்படி நாடு முழுவதும் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தேவையான தரமான குடிநீரை வழங்கும் திட்டத்திற்கு 60 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி இருப்பதாக தெரிவித்த அவர் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சுமார் 4 கோடி குடும்பங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழ்,
நெல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்