குடியரசுதின விழா கோலாகலம் 75 இரானுவ போர்விமானங்கள் அணிவகுப்பு ஒத்திகை

0
279

[1:16 PM, 1/26/2022] டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் கொடியேற்றியதை தொடர்ந்து விமானப்படை சாகசங்கள் நடைபெற்றது. ரஃபேல் போர் விமானங்கள் உள்ளிட்ட 75 போர் ரக விமானங்கள் அணிவகுப்பை விமானப்படை வீரர்கள் நிகழ்த்தினர்.

நமது இரானுவ வலிமையை பறைசாற்றும் வகையில் ஆகாஷ் ஏவுகணை அணிவகுப்பு, இந்தியவிமானப்படையின் இலகுரக எலிகாப்டர்கள் வானில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. கடலோர காவல்படையினர் மத்திய பாதுகாப்பு படையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் , தேசிய மாணவர் படை நாட்டுநலப்பணி திட்ட மாணவர்கள் அணிவகுப்பு நடைபெற்றது.

நமது ராணுவ பலத்தை காட்டும் வகையில் அதிநவீன பீரங்கிகள் அணிவகுப்பு நடைபெற்றது. சிஆர்பிஎப் வீரர்கள் தியாகத்தை போற்றும் விதமாக அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது,

தங்கள் சார்பாக தேர்வு செய்யப்பட்ட அலங்கார ஊர்திகள் ராஜபாதையில் சிறப்பாக அணிவகுத்து வந்தன பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் வகையில் அலங்கார ஊர்திகள் அணிவகுத்து வந்தது. குஜராத் உத்திர பிரதேசம் மேகாலயா உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு. அமைச்சர்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு மத்திய அரசின் பல்வேறு துறை அமைச்சர்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது.

பெ.சூர்யா , நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்