குடும்ப அட்டைதாரர்களுக்கு தடையின்றி உணவுப் பொருட்களை வழங்க வேண்டும். உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவுறுத்தல்..

0
212

நியாய விலைக் கடைகளில்
குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்குவதில் தடைகள் ஏற்படுவதாகவும் சரியான முறையில் உணவுப் பொருட்களை வழங்க வில்லை எனவும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்கு தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டதன் பெயரில் இதுகுறித்து விற்பனையாளர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது.


அதற்கு அவர்கள் குடும்ப அட்டைதாரர்களின் கைரேகையைப் பெறுவதில் இயந்திர கோளாறுகள் இருப்பதாகவும் 2ஜி நெட்வொர்க்கில் இயங்கும் அந்த இயந்திரமானது மிகவும் தாமதமாக செயல்படுகிறது எனவும் விளக்கினார்கள்.
இந்நிலையில் இயந்திரம் சரியாக செயல்படவில்லை என்றால் அதற்குரிய பதிவேடுகளில் பதிவு செய்து முறையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு தடையின்றி உணவு பொருட்களை வழங்க வேண்டுமென உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்,

நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்