சாதி பெயரைக் குறிப்பிட்டு பள்ளி மாணவர்கள் துன்புறுத்தல்…

0
157


திருப்பூர் மாவட்டம் ‘இடுவாய்’ எனும் ஊரில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் மாணவர்களை சாதி பெயர் சொல்லி திட்டியதாக அப்பள்ளியின் தலைமை ஆசிரியை தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இடுவாய் அரசு பள்ளி தலைமை ஆசிரியையாக பணியாற்றி வரும் கீதா என்பவர், பள்ளியில் உள்ள கழிவறையை சுத்தம் செய்யுமாறு மாணவர்களை அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளார்..

மேலும் கழிவறையை சுத்தம் செய்ய மறுத்த மாணவர்களின் சாதி பெயரைச் சொல்லி அவர்களைத் திட்டியுள்ளார். இதனால் மாணவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.
இச்செய்தி அறிந்த ‘மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்’ ஏற்கனவே கீதாவை பணி இடை நீக்கம் செய்தார்.
இந்நிலையில் இவ் விவகாரம் தொடர்பாக “ஆதிதிராவிடர் நலத்துறை” திருப்பூர் மாவட்டம் மங்கலம் காவல் நிலையத்தில் தலைமை ஆசிரியை கீதா மீது புகார் ஒன்றை அளித்தது..

இதனால் கீதா தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்..

தமிழ்,
நெல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்