சிறுவன் கொடூர கொலை அண்டை வீட்டு பெண் கொலையாளி

0
223

சொத்துதகராறு தகராறு கொலையில் முடிந்த விபரீதம். கடலூர் மாவட்டம் கடம்பூர் அருகே 4 வயது சிறுவனை முந்திரி காட்டுக்குள் வைத்து கொடூரமாக கொலை செய்ததாக உறவுக்காரப் பெண்ணை போலீசார் கைது செய்தனர் கடலூர் மாவட்டம் காட்டாம்புலியூர் கிராமத்தை சேர்ந்த 4 வயது சிறுவனை வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபொழுது சிறுவன் காணாமல் போய்விட்டான். காணாமல் போன சிறுவனை உறவினர்கள் அனைவரும் தேடிப்பார்த்து நிலையில் சிறுவன் கிடைக்கவில்லை.

பின்னர் இதுகுறித்து அச்சிறுவனின் தந்தை முத்தாண்டிகுப்பம் காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்தார். சிறுவனின் தந்தை புகார் அளித்ததன் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுவனைத் தேடி வந்த நிலையில் சிறுவன் கிடைக்காததால் ஆத்திரமடைந்த கிராமத்தினர் முக்கிய தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் சமாதானப்படுத்தி மறியலை கைவிட வைத்தனர்.

இந்நிலையில் அருகில் உள்ள முந்திரிகாட்டில் சிறுவன் முகத்தில் காயங்களோடு பிணமாக கிடப்பதாக தகவல் கிடைக்க போலீசார் விரைந்து பிணத்தை கைப்பற்றினர். அப்போது சிறுவனின் முகத்தில் அடித்து கொலை செய்ததற்கான அடையாளங்கள் காணப்பட்டது. சிறுவனை யாரோ கடத்தி வந்து கொலை செய்துள்ளனர் என்ற கோணத்தில் விசாரணையை ஆரம்பித்தனர் காவல்துறையினர்.

அண்டை வீட்டில் வசிக்கும் சிறுவர்களின் உறவினரான முருகன் என்பவரின் மகள் ரஞ்சிதா என்பவர் சிறுவனை அழைத்துச் சென்றதை அப்பகுதி மக்கள் பார்த்ததாக போலீசாருடன் தெரிவித்ததால் ரஞ்சிதாவை அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் பாணியில் விசாரித்ததில் ரஞ்சிதாவிடம் அந்த அதிர்ச்சி உண்மை வெளிவந்தது ரஞ்சிதாவும் சிறுவனும் உறவினராக இருந்தாலும் இவரது குடும்பத்திற்கும் சொத்து தகராறு இருந்து வந்த காரணத்தினால் இருவருக்கும் பேச்சு தொடர்பு இல்லாமல் இருந்துள்ளது சிறுவன் காணாமல் போன அன்று கொய்யாப் பழத்தைக் கையில் வைத்துக்கொண்டு முந்திரி காட்டுக்கு சென்ற ரஞ்சிதாவை பார்த்த சிறுவன் பின்தொடர்ந்து வந்ததாலும் குடும்ப பகையை மனதில் வைத்துக்கொண்டு அந்த சிறுவனின் முகத்தை தரையில் மோதி கொடூரமாக கொலை செய்ததாக காவல் ஆய்வாளர் வள்ளியிடம் ரஞ்சிதா தெரிவித்தார்.

இதனையடுத்து சிறுவனை கொடூரமாக கொலை செய்த ரஞ்சிதாவை காவல்துறையினர் கொலை வழக்கில் கைது செய்தனர்.

இதேபோன்று சம்பவம் அரியலூரில் சில ஆண்டுகள் முன்பு குடும்ப பகை காரணமாக சிறுமி பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டாள் பின் எரிக்கப்பட்ட சிறுமி கொலை செய்தவர்களை தனது மரணவாக்குமூலத்தில் சொல்லிவிட்டு இறந்தாள் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கொலை சிறுவர்கள் சிறுமியர்கள் யாருடன் பேசுகிறார்கள் பழகுகிறார்கள், விளையாடுகிறார்கள் என்பதை பெற்றோர் கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதனை உணர்த்துகிறது.

பெ.சூர்யா , நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்