சுயதொழில் என்பது ,நாம் சுயமாக நமது முதலீடு மற்றும் இடத்தினை தேர்வு செய்து ஒரு தொழிலை வீட்டிலிருந்தபடியோ அல்லது வாடகை பெயரிலோ ஏற்படுத்தி ஒரு தொழிலை செய்வது தான் சுய தொழிலாகும்.எல்லோரும் அரசாங்க வேலையை எதிர் நோக்கி இருந்தாள் ;அதனால் நமக்கு வாழ்க்கை வீணாகத்தான் போகுமே தவிர எந்தவித வருமானமும் கிடைக்க வழியில்லை.மேலும் இதனை பகடைக் காயாக வைத்து பல பணம் பறிக்கும் கும்பல்கள் அங்கே வேலை வாங்கித் தருகிறோம் இங்கே வேலை வாங்கித் தருகிறோம் என்று நம்மை அலைக்கழிக்கும் ,பணத்தையும் பறித்து விட்டு நாம் பறிகொடுத்த பின்னர் தான் நமது தலைவிதி என்னவென்று தெரிந்து நாமாக மனமுடைந்து ,ஒரு சொந்த தொழிலை தொடங்கலாம் என்ற முடிவுக்கு வருவோம் :இதைவிட நாம் வீட்டில் இருந்தபடியே முதலிலேயே, எந்த அலைச்சலையும் மேற்கொள்ளாமல், ஒரு தையல், கூடை பின்னல், அப்பளம் ,வடகம் வத்தல், என்று வீட்டில் இருந்தபடியே சுயதொழில் செய்து வருமானத்தைப் பெருக்கலாம் .தோசை மாவு அரைத்து விற்கலாம்,கோழி வளர்க்கலாம் ,அதில் வரும் முட்டையை விற்கலாம் ,ஆடு வளர்க்கலாம், வீட்டின் பின்புறம் காய்கறிச் செடிகளை பயிரிட்டு, அதன் மூலம் நமக்கு தேவையான காய்கறிகளை இயற்கையாக விளைவித்து ,சமையலுக்கு பயன்படுத்தலாம் .உணவு தயாரித்து சிறியளவில் உணவகம் வைத்து நடத்தலாம் ,இவ்வாறாக வருமானத்தை பெருக்க எத்தனையோ வழிகள் உள்ளன ? நாம் நம் வீட்டில் இருந்தபடியே நமது வீட்டையும் கவனித்து ,சுற்றுப்புறத்தையும் கைகளில் வைத்துக்கொள்ளலாம் . இதனை நினைத்தாலே சுகமாக இருக்கின்றது, ஆனால் வேலைக்காக தினமும் வெளியில் போய் கஸ்டப்பட்டு சம்பாதிக்கும் ஒவ்வொருவரும் படும் பாடுகள் அவஸ்தைகள் நினைத்துப் பாருங்களேன் ;தினமும் ஏதாவது ஒரு வாகனத்தை தேடி ஓடி பிடித்து ,அலுவலகம் சென்று ,அலுவலக வேலைகளை முடித்து ,மீண்டும் புறப்பட்டு வீட்டிற்கு வரும்போது ? நாம் படும் இன்னல்கள் சொல்லி மாளாது, வீட்டிலும் வேலைகள் தயாராக இருக்கும், இவ்வாறு இயந்திர கதியான வேலைகளை நினைத்து ஏங்காமல் ,நமக்கு ஏற்ற ஏதாவது ஒரு சிறு தொழிலை, வீட்டில் இருந்தபடியே செய்து ,நமக்குநாமே ஒரு வருமானத்தை ஏற்படுத்தி ,நம்மை பாதுகாத்து ;நம் குழந்தைகள் நலனையும் பேணிபாதுகாக்கலாம் .நாம் என்றுமே கிடைக்காத ஒன்றிற்குத்தான் ஏங்கித்தவிப்போம் ,அதுபோவேலைவாய்ப்புக்கு ஏங்கித் தவிக்கும் நம்மைப்போன்ற வேலை இல்லாமல் இருப்பவர்களை ஒருங்கிணைத்து ,சுயதொழில் செய்து வாழ்வில் முன்னேறுவோம் வாழ முடியாமல் தவித்து நிற்பவர்களும் சுயதொழில் மூலம் வாழ்ந்து காட்டுவோம் என்ற எண்ணத்தை அவர்கள் மனதில் விதைத்து அவர்களுக்கு ஒரு தூண்டு கோலாக நின்று நாம் செயல்பட வேண்டும் என்பதே எமது ஆழ்ந்த வேண்டுகோள்.

இயற்கையான விவசாயம்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்