ஜம்மு- காஷ்மீர் என்கவுன்டரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி சுட்டுக் கொலை

0
35

கண்டிபோரா பகுதியில் இன்று அதிகாலை என்கவுன்டர் நடந்தது.
பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காமில் என்கவுன்டரின்போது தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதியை என்கவுன்டரில் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

இதுகுறித்து காஷ்மீர் மண்டல காவல்துறையினர் பதிவிட்ட டுவிட்டர் பதிவில், ” கண்டிபோரா பகுதியில் இன்று அதிகாலை நடந்த என்கவுன்டரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். மேற்கொண்டு நடவடிக்கை நடந்து வருகிறது” என்றார்.

பெ. சூர்யா,நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்