ஜாக்கெட்டுக்குள் மறைத்து வளையல் அபேஸ்: திருச்செந்தூரில் திருட்டு திண்டுகல்லில் இரண்டு பெண்கள் கைது

0
267

திருச்செந்தூரில் திருட்டு திண்டுகல்லில் இரண்டு பெண்கள் கைது

திருச்செந்தூர் அருகே உள்ள காயல்பட்டினத்தை சார்ந்த செய்யது சித்திக் என்பவர்கூலகடைபஜாரில் தங்கநகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் நகை வாங்குவது போல் வந்த பெண்திருடர்கள் இருவர் 16 கிராம் மதிப்புடைய வளையல்களை திருடிச் சென்றனர். இரவு கடையை அடைக்கும் பொழுது நகைகளை சரிபார்த்த கடையின் உரிமையாளர் செய்யது சித்திக் வளையல்கள் திருடு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார் பின்பு அவர் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் வளையல்கள் திருடு போனதாக புகார் கொடுத்தார். கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த காவல்துறையினர் 16 கிராம் எடையுடைய வளையல்களை ஜாக்கெட்டுக்குள் மறைத்து இரண்டு பெண்கள் திருடிகொண்டு செல்வதை கண்டறிந்தனர்.

அவர்கள் யாரென விசாரித்து வலைவீசி தேடி வந்த நிலையில் திண்டுக்கல்லை அடுத்த நிலக்கோட்டை ஆவாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாண்டியம்மாள், செல்வி ஆகிய இருவர்தான் இந்த நகைகளை திருடியது என தெரியவந்தது திருச்செந்தூரில் இருந்து நகையை திருடிவிட்டு திண்டுக்கல் தப்பிச் சென்ற இரண்டு பெண்களையும் பிடித்த காவல்துறையினர் ஆறுமுகநேரி அழைத்து வந்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து பின்பு பாளை கொக்கிரகுளம் பெண்கள் சிறையில் அவர்களை அடைத்தனர். அறிவியலின் பெரிய வளர்ச்சி காரணமாக மூன்றாவது கண்ணாக இயங்கும் சிசிடிவி கேமராக்கள் இருப்பதால் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க முடிவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்