டிஜிட்டல் கொள்ளையர்கள் 4 பேர் சிக்கினார்கள் ஒருவருக்கு வலை

0
239

[25.01.22] கடலூர் மாவட்டம் கோன்டூரை சேர்ந்தவர் பிரின்ஸ், இவர் சென்னையில் தங்கி கல்லூரியில் படித்து வருகிறார். அவரது தம்பியை பார்ப்பதற்காக மரக்காணம் அடுத்த அனுமந்தை சுங்கசாவடி அருகே சென்று கொண்டிருந்தபோது 5 பேர் கும்பல் ஒன்று காரை வழிமறித்தது.

பின்னர் அதே காரில் அவரை கடத்தி சென்று அவரை மிரட்டி 10,000 ரூபாய் பணத்தை பறித்துக்கொண்டு பிரின்சை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். பின்னர் பிரின்ஸ் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் 4 பேரை கைது செய்தனர். ஒருவரை வலைவீசி தேடிவருகின்றனர். இந்த கூகுள்பே கொள்ளை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெ. சூரிய பிரகாஷ் , நெல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்