தஞ்சை பள்ளி மாணவி வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்- மதுரை உயர்நீதிமன்றம்

0
216

தஞ்சை பள்ளி மாணவி மதமாற்ற விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் திடீர் திருப்பமாக அவர்கள் குடும்பத்தை சார்ந்தவர்கள் உயர்நீதிமன்றத்தில் கேட்டதை தொடர்ந்து மாணவி தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பல அரசியல் தலைவர்களும் சிபிஐ விசாரணை வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்த நிலையில் தமிழக பாஜக சார்பாக பல இடங்களில் ஆர்ப்பாட்டமும் ,போராட்டமும் நடந்தது. பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அவர்கள் தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டியளித்தும் போராட்டங்களை நடத்தியும் சிபிஐ -ற்கு மாற்ற கோரியும் வந்தார். இந்த மாணவி தற்கொலை விவகாரம்இந்தியா முழுவதிலும் பெரும் மதப்பிரச்சினையா வெடித்தது.
வடநாட்டு ஊடகங்களிலும் கூட மாணவி தற்கொலை விவகாரம் பூதகரமாக கிளம்பியது. சமூக ஊடகங்கள் வாயிலாக பொதுமக்கள் தங்கள் கண்டனங்களை தொடர்ந்து தெரிவித்து வந்தனர். இதில் பலதரப்பினரும் மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் மதமாற்ற தடை சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து அரியலூர் பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி மாணவியின் தரப்பிலிருந்து மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது மதுரை உயர் நீதிமன்றத்தில் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.

பெ .சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்