தமிழக மீனவர்கள் விவகாரம் ! இலங்கை நீதிமன்றம் அதிரடி உத்தரவு

0
227

இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்கள் விடுதலை… இலங்கை நீதிமன்றம் உத்தரவு!!
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை, ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளைக் சேர்ந்த 55 மீனவர்களை விடுவிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை, ராமேஸ்வரம் பகுதிகளைக் சேர்ந்த 55 மீனவர்களை விடுவிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ராமேஸ்வரம், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த 55 மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 18 மற்றும் 20 ஆம் தேதிகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 56 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக்கோரி தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெ. சூரிய பிரகாஷ் ,

நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்