தமிழ்த்தாய் வாழ்த்தை மதிக்காத ரிசர்வ் வங்கி அதிகாரிகள்…

0
311

குடியரசு நாளையொட்டி சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியின் மண்டலத் தலைமையகத்தில் வங்கியின் மண்டல இயக்குனர் எஸ்எம்என். சுவாமி இன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் பலர் கலந்துகொண்ட இவ்விழாவின் இறுதியில் “தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்”ஒலிக்கப்பட்டது. அப்போது பல அதிகாரிகள் எழுந்து நின்று மரியாதை செலுத்தாததால் அதிர்ச்சி அடைந்த சிலர் அவர்களிடம் இது குறித்து விளக்கம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

“தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது ஏன் எழுந்து நிற்கவில்லை” எனக் கேட்டதற்கு “எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதாக”அவர்கள் கூறினர்.எனினும் சலசலப்பு அடங்காத நிலையில் உயர் அதிகாரிகள் தலையிட்டு கேள்வி கேட்டவர்களை சமாதானப்படுத்தினர். எழுந்து நின்று மரியாதை செலுத்துவதை உறுதிபடுத்துவதாகவும் அவர்கள் கூறினர்.


இந்த நிகழ்வு தமிழகத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கி

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்