தமிழ்நாடு – கர்நாடக எல்லையில் பதற்றம்..

0
244


தற்போது ஆயிரக்கணக்கான தமிழக விவசாயிகள் திரண்டு போராட்டம்..

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் பணியை உடனடியாக நிருத்தக் கோரியும் அணை கட்டும் திட்டத்தைக் கைவிடக்கோரியும் தமிழ்நாடு கர்நாடக எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டினால் தமிழகத்திற்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய காவிரி நீரானது கிடைக்காமல் போய்விடும் என்றும் அதனால் காவிரி ஆற்றுப் படுகையில் வேளாண்மை முற்றிலுமாக பாதிக்கப்படும் என்றும் விவசாயிகள் இப்போராட்டத்தைத் தற்போது முன்னெடுத்து வருகிறார்கள்..

அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்ற முழக்கத்துடன் விவசாயிகள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்..

தமிழ்,
நெல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்