தற்கொலை செய்த மாணவியின் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்-தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை..

0
233

மதம் மாறக் கோரி தொடர்ந்து வற்புறுத்தியதால் மன உளைச்சலுக்கு ஆளாகி தஞ்சாவூர் தனியார் பள்ளியைச் சேர்ந்த லாவண்யா என்ற மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பாக தற்கொலை செய்து கொண்டார்.
மாணவி மரணம் அடைவதற்கு முன்பு அவர் பேசிய உருக்கமான வீடியோ ஒன்று வைரலாகப் பரவியது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

இந்நிலையில் மாணவியின் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி தமிழக பாஜக கட்சியினர் அக்கட்சியின் மாநிலத் தலைவர் திரு.அண்ணாமலை அவர்களின் தலைமையில் தற்போது சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றி திரு அண்ணாமலை அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது: வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்ய முயற்சி செய்து மாணவியை மனரீதியாக துன்புறுத்தி அவரைத் தற்கொலை செய்யத் தூண்டியுள்ளனர்.மாணவியின் தற்கொலைக்குக் காரணமான அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனவும் மேலும் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும் கூறினார். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும் எனவும் அவர் கூறினார்.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்