திடீரென 500 ரூபாய் நோட்டுக்களை கொத்தாக காற்றில் வீசிய நபர்; பணத்தை வீசியவரை வலைவீசி தேடும் போலீசார்

0
26

ஹைதராபாத்தில் நபர் ஒருவர் திடீரென காரில் இருந்து இறங்கி 500 ரூபாய் தாள்களை தெருவில் வீசியது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

ஹைதராபாத்தில் உள்ள சார்மினார் தெரு ஒன்றில் திடீரென நபர் ஒருவர் திருமண ஊர்வலத்தின் போது 500 ரூபாய் தாள்களை கொத்தாக வீசியெறிந்துவிட்டுச் சென்றுள்ளார்.

இதனைக்கண்ட சிலர் சிதறிக் கிடந்த பணத் தாள்களை அள்ளி எடுத்தும் சிலர் அதனை தங்கள் செல்போனில் வீடியோ எடுக்கவும் செய்துள்ளனர்.

500 ரூபாய் தாள்களை தெருவில் வீசியெறியும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து , காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கி, ரூபாய் நோட்டுகளை வீசியெறிந்த நபரை தேடி வருகின்றனர்.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்