திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீர்த்தவாரித் திருவிழா

0
229

ரதசப்தமி-யை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீர்த்தவாரித் திருவிழா ஆயிரக்கணக்கானோர் மத்தியில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

பீஷ்மர் ஜெயந்தி, சூரியன்ஜெயந்தி என்று அழைக்கப்படும், ரதசப்தமி தை அமாவாசை முடிந்து ஏழாம் நாள் வரும் சப்தமி தினத்தன்று கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் சூரியனை வழிபட்டால் ஆரோக்கியமாக வாழலாம் என்பது ஐதீகம். அதேபோல ரதசப்தமி-யை ஒட்டி நடைபெறும் தீர்த்த வாரியும் பிரசித்தி பெற்றது. திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயில் உற்சவர் சந்திரசேகர் ஆண்டுதோறும் செய்யாரை அடுத்த கலசபாக்கத்தில் நடைபெறும் தீர்த்தவாரியில் பங்கேற்பது வழக்கம். இந்த ஆண்டு கலசபாக்கத்தில் நடைபெற்ற தீர்த்தவாரியில் அண்ணாமலை உண்ணாமுலை அம்மன் ஆகியோர் அரோகரா முழக்கங்களுக்கு மத்தியில்
ஆற்றில் புனித நீராடினர்.

தீர்த்தவாரியை தொடர்ந்து கலசபாக்கத்தில் வீற்றிருக்கும்
திருமா முனீஸ்வரர் மற்றும் அம்பாளுடன் இணைந்து அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் ஆகியோர் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இன்று காலை சூரியனை வணங்கிய பின்னர் அண்ணாமலையார் திருவண்ணாமலை திரும்புகிறார்.

பெ. சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்