தூத்துக்குடி விமான நிலையம் பிங்க் நிறமாக மாறியது

0
352

உலகெங்கிலும் உள்ள பெண்களிடையே அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் புற்றுநோயாக மார்பக புற்றுநோய் உள்ளது. இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தூத்துக்குடி விமான நிலையம் நேற்று பிங்க் நிறமாக மாறியது.

உதவும் உள்ளங்கள் அமைப்பின் நெல்லை கேர் செண்டர், இந்தியவிமான நிலைய ஆணையத்துடன் இணைந்து, தூத்துக்குடி விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் ஊழியர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டது. தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் சுப்பிரமணியம் நேற்று தொடங்கி இந்நிகழ்வை தொடங்கிவைத்தார்.


இந்நிகழ்வில் வீதி நாடகங்கள், விழிப்புணர்வுப் பேச்சுக்கள், துண்டுப் பிரசுரங்கள், கையெழுத்துப் பிரசாரங்கள் என்பன நடத்தப்பட்டன. இந்த நிகழ்வை பயணிகள் மிகவும் ஆர்வத்துடன் பாராட்டி கையெழுத்துப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர், குறிப்பாக டாக்டர் மரியா தாஸ் ரேடியோதெரபி பேராசிரியர், சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் கழகம் லக்னோ. ஆகியோர் நிகழ்வை தொடங்கி வைத்து உரையாற்றினார்கள்.

விமானப்பயணிகள் தூத்துக்குடி விமானநிலைய குழு மற்றும் நெல்லை கேன்சர் கேர் சென்டர் பணியாளர்களை பாராட்டினர். அத்துடன் பிரஷாந்த் பாரீக் தலைமை பொது மேலாளர் போஷ் முயற்சியையும் பாராட்டினார்கள். இந் நிகழ்வில் 500 க்கும் மேற்பட்ட பயணிகள் பங்கேற்றனர்.

NCCC குழு விமானநிலைய ஊழியர்களுக்கு விரிவான புற்றுநோய் விழிப்புணர்வு அமர்வையும் நடத்தியுள்ளனர். இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் டாக்டர் சிந்தியா, டாக்டர் அபிராமி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்