தேசிய கொடி அவமதிப்பு அமேசான் மீது வழக்கு

0
272

போபால் தேசிய கொடியை அவமதித்த குற்றச்சாட்டில் அமேசான் இந்தியா நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்படும் என மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார். மின்னணு வர்த்தக நிறுவனமான அமேசான் இந்தியா நிறுவன ஆன்லைன் வாயிலாக பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் அமேசான் நிறுவனம் தேசிய மூவர்ணக்கொடி அச்சிட்ட ஆயத்த ஆடைகள் உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து குறித்த சமூக ஊடங்களில் தகவல் வெளியானது. இது குறித்து உள்துறை அமைச்சகம் நரேந்திர மிஸ்ரா கூறியதாவது தேசிய கொடிக்கு தனி மரியாதை தரவேண்டும் தேசிய கொடியை பயன்படுத்த தொடர்பான விதிமுறைகள் உள்ளன. ஆனால் அமேசான் நிறுவனம் தேசியக்கொடியை அச்சிடப்பட்ட காலணியைக்கூட விற்பனை செய்கிறது. எனவே தேசிய கொடியை அவமதித்த அமேசான் நிறுவனம் மீது வழக்கு தொடுக்க டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளேன், இவ்வாறு அவர் கூறினார் தேசியக் கொடி அவமதிப்பு விவகாரம் தொடர்பான சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. அமேசான் நிறுவனம் தேசியக்கொடியுடன் விற்பனை செய்த “கீ செயின்” , சாக்லேட் கோப்பைகள் ஆடைகள் ஆகியவற்றின் படங்கள் சமூக வலை தளங்களில் வெளியாகியுள்ளன இதையடுத்து தேசியக்கொடியுடன் பொருட்களை விற்பனை செய்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக அமேசான் தெரிவித்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்