தொல்லியல்துறையின் முதல் இயக்குநர் திரு, நாகசாமி அவர்கள் நேற்றிரவு காலமானார்.

0
300

கல்வெட்டு ஆய்வாளரும், தொல்லியல்துறையின் முதல் இயக்குநருமான திரு, நாகசாமி அவர்கள் நேற்றிரவு உடல்நலக்குறைவால் காலமானார்.

சேக்கிழாரின் பெரியபுராணம் குறித்த ஆய்வுக்காக கலைமாமணி விருது பெற்ற தொல்லியல் ஆய்வாளர் நாகசாமி அவர்களின் சிறந்தபணியினை பாராட்டி 2018- மத்தியஅரசு அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கியது.
கல்வெட்டு, கலை, இலக்கியம், வரலாறு துறைகளில் அரிய நூல்களைப் படைத்தவர்

“உயர்ந்தோர் பள்ளர்” என்ற [23.10.98 ]தினமலர் நாளிதழில் வேளாண் சமூகமான தேவேந்திரகுல வேளாளர்களின் சமூக பண்பாட்டு வரலாற்றை தொல்லியல் முறையில் ஆய்வு செய்து உலகமறிய செய்த முனைவர். திரு. நாகசாமி அவர்கள் எழுதிய ஆய்வுக் கட்டுரை வரலாற்று சிறப்புமிக்கது. அனைத்து தமிழ்சமூக ஆர்வலர்களின் பாராட்டுகளையும் பெற்றது அந்த கட்டுரை.

உடல்நலக்குறைவால் காலமான நாகசாமி அவர்களுக்கு தமிழக பாரத பிரதமர் திரு நரேந்திர மோடிஅவர்கள் மற்றும் மத்தியநிதிதுறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பாஜக மத்திய அமைச்சர் எல். முருகன், முன்னாள் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் அவருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

சூரிய பிரகாஷ் , நெல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்