நீட் முதுநிலை தேர்வு -வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

0
195

நீட் முதுநிலை தேர்வின் கேள்விக்கான விடைத்தாள் வெளியிடவும், மறுமதிப்பீடு முறையை உருவாக்க கோரியும் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட் முதுநிலை தேர்வின் கேள்விக்கான விடைத்தாளை வெளியிடவும், மறுமதிப்பீடு முறையை உருவாக்க கோரியும் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சத்தீஸ்கரை சேர்ந்த சுஷாந்த் கேங்கே தாக்கல் செய்த பொதுநல மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. மனுவில் நீட் முதுநிலை தேர்வின் கேள்விக்கான விடைத்தாளை வெளியிட கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், நியாயத்தையும், வெளிப்படைத் தன்மையையும் உறுதி செய்ய மறுமதிப்பீடு முறையையும் உருவாக்க வலியுறுத்தப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவிற்கு பதிலளிக்குமாறு தேசிய தேர்வு வாரியம், மத்திய சுகாதார துறை செயலர், மருத்துவ கவுன்சிலிங் குழுவின் இயக்குனர் ஆகியோருக்கு உத்தரவிட்டார். மேலும், ஏற்கெனவே நிலுவையில் உள்ள மனுவுடன் இந்த பொதுநல மனுவையும் இணைக்க உத்தரவிடப்பட்டது.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்