நேரு நினைத்திருந்தால் சுதந்திரம் கிடைத்த பொழுதே கோவாவை விடுவித்து இருக்கலாம்-பிரதமர் நரேந்திர மோடி

0
205

நேரு நினைத்திருந்தால் 1947-ல் சுதந்திரம் கிடைத்த பொழுதே போர்ச்சுக்கீசியர் ஆளுகையில் இருந்து விடுவித்து இருக்கலாம் என நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

வருகின்ற 11ம் தேதி கோவாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதனையொட்டி அம்மாநிலத்தில் அப்போ சா என்ற இடத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் நரேந்திர மோடி அப்போது நேரு நினைத்திருந்தால் இந்தியா சுதந்திரம் அடைந்த சில மணிநேரத்திலேயே கோவாவை விடுவித்திருக்கலாம் எனவும் ஆனால் போர்க்கீசிய ஆளுமையில் இருந்து கோவாவை விடுவிக்க 15 ஆண்டுகள் ஆனது எனவும் இது பலருக்கு தெரியாது என்றும் கூறினார்.

கோவா இளைஞர்களின் அரசியல் கலாச்சாரங்களை காங்கிரஸ் கட்சி புரிந்துகொள்ளவில்லை எனவும் கோவா மீது காங்கிரஸ் கட்சிக்கு எப்போதும் ஒரு பகைமை உண்டு என்றும் மோடி குற்றம்சாட்டியள்ளார்.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்