பணிந்தது பாரத ஸ்டேட் வங்கி- கர்ப்பிணிபெண்கள் குறித்த சர்ச்சை உத்தரவு

0
286

கர்ப்பிணிகள் பணிநியமனம் செய்வதில்லை என்ற உத்தரவை எஸ்பிஐ தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. 3 மாத கர்ப்பிணி பெண்களை பணிநியமனம் செய்வதில்லை என்ற உத்தரவை நிறுத்திவைக்க பாரத ஸ்டேட் வங்கி முடிவு.

மூன்று மாதம் கர்ப்பமாக இருக்கும் பெண்களை பணி நியமனம் செய்யக்கூடாது என்று எஸ்பிஐ வங்கி அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவிக்கபட்டிருந்தது. பாரத ஸ்டேட் வங்கியின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அந்த உத்தரவை பாரத ஸ்டேட் வங்கி நிறுத்தி வைத்துள்ளது.

சமூக ஊடகங்கள் மற்றும் சமூக ஆர்வலரின் பலத்த கண்டனங்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி பணிந்தது.

பெ.சூர்யா , நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்