பணியாரம் ருசியாக இல்லை என சொன்ன மனைவி கழுத்தை நெரித்து கொலை

0
284

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகேயுள்ள கஞ்சநாயக்கன்பட்டி-யை சேர்ந்தவர் லட்சுமணன் 30 வயது கூலி தொழிலாளியான இவரது மனைவி சரண்யா விற்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர்.லட்சுமணன் அடிக்கடி குடித்துவிட்டு மனைவிடம் வந்து தகராறில் ஈடுபடுவதாக தெரிகிறது.

நேற்று முன்தினம் இரவு குடித்துவிட்டு லட்சுமணன் வீட்டிற்கு வந்துள்ளார். சிறிது நேரத்தில் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இரவு 10 மணிக்கு ஈரோட்டில் உள்ள சரண்யாவின் தம்பி நந்தகுமார் லட்சுமணன் போன் செய்து திடீரென உன் அக்கா இறந்துவிட்டார் என கூறியுள்ளார். இதனால் பதற்றம் அடைந்த லட்சுமணன் மற்றும் அவரது உறவினர்கள் கஞ்சநாயக்கன்பட்டிக்கு விரைந்து வந்தனர். அங்கு வீட்டில் சரண்யா சடலமாக இறந்து கிடந்தார். அவரது நெற்றி பகுதியில் காயம் ஏற்பட்டு வீக்கம் அதிகமாக இருந்தது.அது போக கைகள், கால்கள் மற்றும் சில இடங்களில் சந்தேகப்படும்படியான காயங்கள் இருந்தது, தனது அக்கா சாவில் சந்தேகம் உள்ளது எனவும், கணவர் லட்சுமணன்தான் அடித்து கொலை செய்து இருக்கலாம் அதனால் உரிய விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும் என்று தீவட்டிப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

ஓமலூர் டிஎஸ்பி சங்கீதா இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து போன சரண்யாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து லட்சுமணனை பிடித்து வந்து விசாரணை நடத்தினர். அதில் லட்சுமணன் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். இதுபற்றி போலீசார் கூறுகையில் சம்பவத்தன்று லட்சுமணன் மது குடித்துவிட்டு மனைவி மற்றும் குழந்தைகளுக்காக கடையில் பணியாரம் வாங்கிவந்துள்ளார். அதனை சரண்யா சாப்பிட்டுள்ளார் அந்த பணியாரம் ருசியாகயாக இல்லை என்பதால் அவரிடம் தகராறு செய்துள்ளார். அந்த தகராறில் சரண்யாவை லட்சுமணன் அடித்துக் கீழே தள்ளியுள்ளார், பிறகு கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். மனைவி இறந்தது தெரிந்ததும் அவரது தம்பிக்கு போன் செய்து திடீரென இறந்துவிட்டார் எனக் கூறியுள்ளார். என போலீசார் தெரிவித்தனர் இதனை அடுத்து இலட்சுமன் மீது கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

பெ . சூர்யா நெல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்