பனங்காட்டுபடை – ஹரி நாடார் கைது

0
240

நெல்லைமாவட்டத்தை சார்ந்தவரும் சென்னையில் வசித்துவந்த பனங்காட்டுப் படை கட்சி தலைவர் ஹரி நாடார் நடமாடும் நகைக்கடையாக வலம் வருபவர் . கழுத்து, கை என்று உடல் முழுக்க பல கிலோவிற்கு தங்க நகை அணிந்து வலம் வருவது ஹரி நாடார் வழக்கம். அரசியல் தாண்டி சினிமா தயாரிப்பு, சினிமா படங்களில் நடிப்பது போன்ற பணிகளையும் இவர் செய்து வருகிறார்.நாங்குநேரி இடைத்தேர்தல், ஆலங்குளம் சட்டசபை தேர்தல்களில் அதிக வாக்குகள் பெற்று இவர் கவனம் ஈர்த்தார். இந்த நிலையில் கடந்த வருடம் மோசடி வழக்கில் ஹரி நாடார் பெங்களூரில் கைது செய்யப்பட்டார்.நாங்குநேரி இடைத்தேர்தல், ஆலங்குளம் சட்டசபை தேர்தல்களில் அதிக வாக்குகள் பெற்று இவர் கவனம் ஈர்த்தார். இந்த நிலையில் கடந்த வருடம் மோசடி வழக்கில் ஹரி நாடார் பெங்களூரில் கைது செய்யப்பட்டார்.

பெங்களூர் வழக்கு ஹரி நாடார் :பெங்களூரில் இருக்கும் வெங்கட்ராமன் என்பவரிடம் இவர் ரூ. 7.2 கோடி ரூபாய் வாங்கி இவர் மோசடி செய்து இருக்கிறார். அவருக்கு கடன் வாங்கி தருவதாக கூறி ஹரி நாடார் கடைசியில் கடன் வாங்கி தராமல் கமிஷன் மட்டும் பெற்று ஏமாற்றி உள்ளார். இந்த வழக்கில்தான் கர்நாடக போலீசார் ஹரி நாடாரை கைது செய்தனர். இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஹரி நாடார் தற்போது பரப்பன அக்ரஹார சிறையில் காலம் கழித்து வருகிறார்.

கைது; இந்த நிலையில் பெங்களூர் சிறையில் உள்ள ஹரிநாடாரை நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி வழக்கில் திருவான்மியூர் போலீசார் கைது செய்துள்ளனர். ஹரிநாடாரை தமிழ்நாடு போலீஸ் கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக முன்பே தகவல்கள் வந்தன. இது தொடர்பாக திருவான்மியூர் போலீசார் பெங்களூர் போலீசாருக்கு கடிதம் எழுதி இருந்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில்தான் இன்று பிற்பகல் ஹரிநாடார் கைது செய்யப்பட்டார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்