பள்ளி மாணவியிடம் அத்துமீறிய பி.டி. மாஸ்டர்

0
31

கர்நாடகாவில் மாணவியிடம் அத்துமீறி நடந்து கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு திருமண நிச்சயதார்த்தத்தை நிறுத்த முயன்ற ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரியும் மகேஷ் பிராதர் என்பவர் அதே பள்ளியில் படிக்கும் 17 வயதான மாணவியிடம் காதல் வலை வீசி அத்துமீறி நடந்துள்ளார். அதை தனது செல்போனில் ஆபாச புகைப்படமாகவும் எடுத்து வைத்துள்ளார். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோர் அந்தப் பெண்ணிற்கு படிப்பு முடிந்து 18 வயது நிரம்பிய பின்னர் திருமணம் செய்ய முன்கூட்டியே நிச்சயதார்த்தத்திற்கு ஏற்பாடுகள் செய்து வந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த உடற்கல்வி ஆசிரியர் மகேஷ் பிராதர், நிச்சயதார்த்தத்தில் தனக்கு விருப்பமில்லை என்று மாணவியை வீட்டில் தெரிவிக்குமாறு கூறியுள்ளார். ஆனால் அந்த மாணவி அதற்கு மறுக்கவே தனது செல்போனில் வைத்திருந்த மாணவியின் ஆபாச படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இது அந்த மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்து, ஆசிரியரிடம் சென்று கேட்டபோது அவர் பெற்றோரிடமும் மிரட்டல் தொனியில் பேசி உள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் உடற்கல்வி ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்து பின்னர் போலீசில் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து உடற்கல்வி ஆசிரியர் மகேஷை சிறையில் அடைத்தனர்.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்