பழைய வாகனங்களை வாங்குவோருக்கான எச்சரிக்கை

0
262

தற்பொழுது மத்திய அரசாங்கம் அறிமுகம் செய்துள்ள புதிய வாகன உபயோக சட்டத்தின் படி “சொந்த உபயோகத்திற்கு இருக்கும் வாகனத்தை இருபது வருடமும் வாடகை வாகனத்தை 15 வருடம் மட்டுமே சாலையில் ஓட்ட வேண்டும்” என்று புதிதாக சட்டம் பிறப்பித்துள்ளது சட்டமானது வரும் 2022ஆம் வருடம் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. சட்டமானது அமலுக்கு வந்த பின்பு பழைய வாகனங்கள் அனைத்தும் உடைக்கப்படும் பின்பு அதற்குண்டான அரசாங்கம் நிர்ணயம் செய்யும் பணத்திற்கு ரசீது வாகன உரிமையாளருக்கு கொடுக்கப்படும்.

Watch the story of the iconic motorcycle Rajdoot 175 [Video]

அதை அவர்கள் அன்றைய மோட்டார் வாகன சட்டத்திற்கு உட்பட்ட புதிய BS-6 மற்றும் எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்க ஈடாக பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால் தற்பொழுது சில தரகர்கள் YAMAHA RX100 , YAMAHA RD350 ,YAMAHA RXZ,,, ROYAL ENFIELD , JAWA , YESDI , RAJDOOT, சில இருசக்கர வாகனங்கள் மற்றும் பழைய கார்களையும் பாரம்பரிய வாகனங்கள் எனக்கூறி

Royal Enfield Classic 350 Recall 2021

மேற்கண்ட வாகனங்களை பொதுமக்களிடம் ஏமாற்றி நூதன முறையில் 2 லட்சம் மற்றும் 3 லட்சம் என அதிக விலைக்கு விற்று வெகுஜன மக்களை ஏமாற்றி வருகின்றனர் எனவே தயவுசெய்து எக்காரணத்தைக் கொண்டும் மக்கள் ஏமாற வேண்டாம் .

இவ்வாகனங்கள் அனைத்தும் வரும் ஏப்ரல் 2022 ஆம் ஆண்டுக்கு மேல் ஓட்ட முடியாது ஆகவே மக்கள் யாரும் வாங்கி ஏமாற வேண்டாம்.

Jawa aims to have 500 dealerships by June 2022


வாகனம் அனைத்தும் உடைக்கும் பொழுது வாகனத்தின் எடைக்கேற்ப பணம் கொடுக்கப்படும் இவ்வாறு அனைத்தும் 2022ஆம் ஆண்டு மார்ச்சில் காலாவதி ஆகிவிடும்.இச்செய்தியை வாகன போக்குவரத்து மற்றும் தணிக்கை ஆய்வாளர் MG.ஜெயநிதி தெரிவித்தார்.

பெ.சூர்யா, நெல்லை.


ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்