புதுக்கோட்டை-யில் ஜல்லிக்கட்டு போட்டி

0
282

புதுக்கோட்டை மாவட்டம் குலமங்கலம் என்ற கிராமத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். இதில் 500க்கும் மேற்பட்ட காளைகளும் 150 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டியானது அதிக இடங்களில் நடைபெற்று வரும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பல பகுதிகளில் நடைபெற்ற நிலையில் இன்று குலமங்கலம் கிராமத்தில் நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட மாடுபிடி வீரர்களுக்கு தங்ககாசுகள் உள்ளிட்ட பல பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

மாடுபிடிவீரர்கள் தகுந்த சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்.
ஜல்லிக்கட்டு போட்டியினை பாதுகாப்புடன் நடத்துவற்கு தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வாடிவாசல் மைதானத்தை சுற்றிலும் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்